பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உங்களுடைய மார்க்கத்தை வெறுத்ததைப் போல் வேறு எதையும் வெறுக்கவில்லை. ஆனால் இன்றோ எனக்கு அதை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை" என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினார்.

அதன் பின்னர், துமாமா மதீனாவிலிருந்து நேராக மக்காவிற்குப் பயணமானார்.

குறைஷிகள் அவரைக் கண்டதும், "நீர் என்ன மதம் தவறியவர் ஆகிவிட்டீரே?" என்று கேட்டனர்.

அதற்கு அவர், "நான் மதத்தில் தவறவில்லை; ஆண்டவனுடைய தூதரின் மார்க்கத்தைத் தழுவி இருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

துமாமா வாழ்ந்து வந்த யமாமா மாகாணத்திலிருந்தே மக்காவுக்குக் கோதுமை போய்க் கொண்டிருந்தது.

அவர் முஸ்லிமானதும், பெருமானார் அவர்களுடைய உத்தரவு இல்லாமல், இஸ்லாத்தின் விரோதிகளான மக்கா குறைஷிகளுக்குக் கோதுமை அனுப்ப இயலாது என்று கூறி, அதை நிறுத்திவிட்டார்.