பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

"குறைஷிகளே! உங்களுடைய சரக்குகள் ஏதாவது திருப்பித் தரப்படாமல் என்னிடம் உள்ளனவா?” என்று கேட்டார்.

"சரக்குகள் எதுவும் பாக்கி இல்லை; நீர் உண்மையானவர்; நேர்மை மிக்கவர் என்பதை அறிகிறோம். ஆண்டவன் உமக்குத் தகுந்த பரிசு வழங்குவான் என்று அவர்கள் மகிழ்வோடு சொன்னார்கள்.

"நான் முன்னரே இஸ்லாத்தைத் தழுவியிருப்பேன். ஆனால், உங்களுடைய சரக்குகளை அபகரிப்பதற்காகவே நான் அவ்வாறு செய்தேன் என நீங்கள் சந்தேகப்படுவீர்கள். ஆதலால், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நபி அவர்கள் ஆண்டவனுடைய தூதர் என நான் உறுதி கூறுகிறேன்” என்று சொல்லி , இஸ்லாத்தைத் தழுவினார் அபுல் ஆஸ்.


42. ஆண்டவன் அருளிய வெற்றி

உடன்படிக்கையையும், அபூஜந்தலின் பரிதாப நிலைமையையும் கண்ட ஹல்ரத் உமர் அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், பெருமானார் அவர்களிடம் சென்று "ஆண்டவனுடைய