பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


அப்பொழுது அபூபக்கர் அவர்கள், "பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய நபி; அவர்கள் எதைச் செய்தாலும் ஆண்டவனுடைய கட்டளைப்படியே செய்வார்கள்" என்று சொன்னார்கள்.

அதன் பின்னர், பெருமானார் அவர்களிடம் மறுத்துப் பேசிய குற்றத்தை உமர் அவர்கள் நினைத்து, நினைத்து தங்கள் ஆயுள் வரை வருந்திக்கொண்டே இருந்தார்கள். அக்குற்றத்துக்குப் பரிகாரமாக, தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், சிறப்பான தர்மங்களைச் செய்வதிலும் அடிமைகளை விடுதலை செய்வதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

இதர முஸ்லிம்களுக்கும் அபூஜந்தலின் நிலைமையைக் கண்டு மிகுந்த கவலை உண்டாயிற்று. ஆனால், பெருமானார் அவர்களின் கட்டளையானதால் ஒன்றும் பேச இயலவில்லை.

பெருமானார் அவர்கள் அதன்பின் குர்பானியும் அதைச் சேர்ந்த சடங்குகளையும் அங்கே, நிறைவேற்றினார்கள்.

உடன்படிக்கை நிறைவேறியதும் மூன்று நாட்கள் ஹுதைபிய்யாவிலேயே பெருமானார்