பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

முதலாவதாக, ஆண்டவன் ஒருவன் என்பதையும் நான் அவனுடைய தூதன் என்பதையும், நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்கள் அவற்றை ஒப்புக்கொண்டால், "இரவிலும் பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை ஆண்டவன் உங்கள்மீது கடமையாக்கி இருக்கிறான்" என்று கூறுங்கள். அவர்கள் அதை அங்கீகரித்த பின், "தருமம் செய்ய வேண்டியது உங்கள் மீது கடமையாயிருக்கும். உங்களில் செல்வர்களிடமிருந்து நிதி வசூலித்து, ஏழைகளுக்குக் கொடுக்கப்படும்" என்று சொல்லுங்கள். எவரையும் கொடுமைப்படுத்தாதீர்கள். ஏனெனில் கொடுமைப்படுத்தப்பட்டோர் பிரார்த்தனைக்கும் ஆண்டவனுக்கும் மத்தியில் திரை ஒன்றும் இல்லை."


49. நேரில் வந்து கண்டு மகிழ்ந்தனர்

பெருமானார் அவர்களுடைய கட்டளைகளை சிரமேற் கொண்டு, முஸ்லிம் பிரச்சாரகர்கள் பல பகுதிகளுக்கும் சென்று, இஸ்லாத்தைப் பற்றி போதனை செய்து வந்தார்கள்.

அவர்களுடைய போதனையால் பல கூட்டத்தார் ஆங்காங்கே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.