பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

உள்ளவர்கள். அதனாலேயே ஆண்டவன் தன்னுடைய வேதத்தை அவர்களிடம் அருளினான். அவர்கள் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். அப்போது எல்லோருக்கும் முதன்மையாய் முஹாஜிர்களும், அடுத்தபடியாக அன்ஸாரிகளாகிய நாங்களும் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டோம். நாங்கள் ஆண்டவனுடைய வழியில் உதவியவர்களாயும், நபித்துவத்திற்கு அமைச்சர்களாயும் இருக்கின்றோம்’ என்று கூறி முடித்தார்கள்.

அதன்பின், தமீம் கூட்டத்தாரைச் சேர்ந்த ஸிப்ரிகான் என்ற கவிஞர் தம் கருத்தைக் கவிதையில் பாடினார்.

அவருக்கு எதிராக, முஸ்லிம் ஹஸ்ஸான் கவிதை பாடினார்.

வாக்கு வன்மையிலும், கவி பாடுவதிலும் பெருமானார் அவர்களிடம் இருப்பவர்களே மேலானவர்கள் என்று ஒப்புக் கொண்டனர். ஆடம்பரமும் அகம்பாவமும் ஒடுங்கியது. அக்கூட்டத்தார் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதன் பின்னர் நாயகம் (ஸல்), அவர்களுக்கு விலையுயர்ந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள்.