பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தலங்களையே வணக்கத் தலங்களாக்கி விட்டார்கள். நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது. நான் அதை விலக்குகின்றேன்" என்றார்கள்.

53. முடிவை உணர்தல்

பெருமானார் அவர்கள் தொழுகையை முடித்து, நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவில், "இவ்வுலக பாக்கியங்களையோ, அல்லது மறுமையில் ஆண்டவனிடத்தில் உள்ளவற்றையோ இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியான அதிகாரத்தை ஆண்டவன் ஓர் அடியவனுக்குக் கொடுத்தான். அவ்வடியவனோ ஆண்டவனிடத்தில் உள்ளவற்றையே ஒப்புக் கொண்டான்” என்று கூறினார்கள்.

அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அபூபக்கர் அவர்களின் கண்களில் நீர் மல்கியது, உள்ளத்தில் வருத்தம் மேலிட்டது.

அருகில் இருந்தவர்கள், "வேறு ஒருவரைப் பற்றிக் கூறும்போது அபூபக்கர் அவர்கள் ஏன் வருந்த வேண்டும்?” என்று வியப்போடு அவர்களைப் பார்த்தார்கள்.