பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


பெருமானார் அவர்கள், தங்கள் மரணத்தைப் பற்றியே அச்சொற்களைச் சொன்னார்கள் என்று அபூபக்கர் அவர்கள் உணர்ந்ததாலேயே அவ்வாறு அவர்களுக்கு வருத்தம் மேலிட்டது.

அதன்பின், பெருமானார் அவர்கள், "யாருடைய செல்வத்துக்கும் தோழமைக்கும் நான் அதிகமாக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன் என்றால், அபூபக்கர் அவர்களுடைய செல்வத்துக்கும் தோழமைக்குமே ஆகும்"

"உலகில் என்னைப் பின்பற்றியவர்களில், யாரையாவது என்னுடைய முதன்மைத் தோழராக்கிக் கொள்ள வேண்டுமானால், நான் அபூபக்கரையே அவ்வாறு ஆக்கிக் கொள்வேன்"

"பள்ளிவாசலுக்கு வரும் வாயில்களில் அபூபக்கர் அவர்கள் வரும் வாயிலைத் தவிர மற்றவைகளை எல்லாம்மூடி விடுங்கள். ஆம், முன்பு இருந்த கூட்டத்தார் தங்களுடைய் நபிமார்கள், பெரியோர்களின் அடக்கத்தலங்களையே வணக்கத் தலங்களாக்கி விட்டார்கள். நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது. நான் அதை விலக்குகின்றேன்" என்றார்கள்.