12
மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
ஆனால், "யாரும் பிணங்களைப் பார்க்கக் கூடாது" என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பிணங்கள் அழுகி நாற்றம் எடுக்கத் தொடங்கினதும், கழுகும் பருந்தும் சூழ்ந்து கொண்டன. ஆயினும், கற்குவியல்களின் மேலே அமர்ந்து குரலெடுத்துக் கூவி வருந்தின.
பாலைநிலக் கொடிய வழிகளின் காட்சியைப் பார்த்தீர்களா? என்ன கொடுமை, எவ்வளவு துன்பம்!
இத்தகைய கொடிய வழிகளைக் கடந்து உயிரோடு வந்தனர் சிலர். எதற்காக வந்தனர்? அரசனைக் காண்பதற்காக அவர்கள் யார்? இரவலர்கள்! மனக்குறிப்பை முகத்தைக் கண்டமாத்திரத்திலேயே, அறிந்து கொடுத்து மகிழும் கொடையாளனாகிய வழுதியின் அருளை எண்ணியே புலவர்கள் இத்தகைய கொடிய வழியிலும் நடந்து வந்துள்ளனர்.
அவர்கள் கூறும் பாலையின் கதை, அப்பப்பா, எவ்வளவு பயங்கரம், பாலையில் படுகொலை.
ஒரு வரிப்புலி, வேட்டைக்குக் கிளம்பியது. மிருகங்களை அடித்துத் தின்றது; பசிதீர்ந்தபின், குகைக்கு ஒடி வந்தது.
குகையினுள்ளே கல்லிடுக்கில் புலிபடுத்தது. உண்ட மயக்கம்-நன்கு உறங்கி விட்டது.
மாலை வந்தது.நிலா எழுந்தது-ஒளியைச் சொரிந்தது. காடெங்கும் ஒரே வெளிச்சம்!