பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



நின் கணை செய்த புறப் புண்ணுக்கு வெட்கப்பட்டு, வடக்கிருந்து மாண்ட சேரன், நின்னினும் புகழ் உடையவன் தானே! என்று கேட்டார் குயத்தியார்.

பெருவளத்தான் “விம்மி விம்மி” அழுதான்.


27 அன்னச் சேவலே கேள்!

அன்னச் சேவலே! அன்னச் சேவலே ஒன்று கேள்! நீ, நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும் குமரியில் விருந்தருந்தி, வடதிசைக் கண்ணுள்ள இமய மலைக்குச் சென்றால், வழியிலே சோழ நாடு தெரியும். அதனைக் கண்டதும், அங்கே இறங்கிக் களைப்ப்ாறு நேரே உறையூருக்குப் பறந்து போ! வானோங்கும் கிள்ளியின் மாளிகை உன்னைத் தடுத்து நிறுத்தும். வாயில் காப்போர்க்கு அஞ்சாமல் உள்ளே செல். அங்கே, பெருங் கோக்கிள்ளியின் காதிற் கேட்கும்படி, யான் ஆந்தைப் புலவன் “அடிமை” என்று கூறு!

அப்புறம் நடக்கும் சிறப்பை நீயே தெரிந்து கொள்!

பட்டும் பீதாம்பரமும் பாலும் பழமும் அளித்துக் கொட்டு மேளத்துடன் உனக்கும் உன் மனைவிக்கும் திருமணம் நடத்தி வைப்பான்!


28. தமிழின் ஆட்சி!

பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த யாழ்கொண்டாய். ஆனால் கொடுக்கும் இயல்பினர்