பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



குடிசையில், விறலி, உடுக்கையடித்து இனிய ஒசையை எழுப்பிக் கொண்டிருந்தாள். அவ்வுடுக்கை, ஆமையைக் கொம்பில் கோத்துப் பிடித்தது போன்ற உருவத்துடன் காட்சியளித்தது...

‘திறமையுடைய கலைஞர்கள்’ என்று வியந்தார் புலவர்.

உடனே அவர் உள்ளம் கிள்ளிவளவனை நினைத்துக் கொண்டது. வளவன் இருக்கும் போது, வண்டமிழ்க் கலைஞர் ஏன் வருந்த வேண்டும்?

அவர் பாணைனை அருகில் அழைத்தார். மிகவும் அக்கறையோடு அவனிடம் பேசினார்.

‘பானா! உன் மனைவி விறலியுடன் புறப்பட்டு நேரே சோழநாட்டுக்குப் போ... பொறுமையாகவே போகலாம். வழியில், பாதிரி பூத்துச் சொரியும் பண்ணன் என்னும் வள்ளல் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் தங்கியிருந்து, பொறுமையாகவே செல், போனால், பரிசு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று ஐயுறாதே! விறகு பொறுக்குவோர்க்குத்தான் அவ்விதம் ஐயம் எழும்! ஏனெனில், விறகு பொறுக்கும் போது, எப்போதாவது தவறிப் பொன் கிடைப்பதும் உண்டு. ஆனால் அவர்கள் அதையே நினைத்துக்கொண்டு நாள் தோறும் சென்றால், “இன்றும் கிடைக்குமோ இல்லையோ?” என்ற ஐயம் எழுந்து கொண்டே யிருக்கும்! கிள்ளிவளவனிடம் செல்வோர், ஐயத்தை அறவே கிள்ளி எறிந்துவிட வேண்டும் சென்று அவன் முன் நின்று பார், கைகள், கொடுத்துக் கொடுத்து நீண்ட கைகள்! கொடுக்கக் கொடுக்க நீளுங் கைகள் என்று தெரிந்து கொள்வாய்!