உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

51



48. மலை போன்ற மனம்

“வாரும் புலவரே உட்காரும்” என்றாள் அவ்வை.

“ஏதேனும் செய்தி உண்டா?” என்றார் புலவர்.

“நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்”

“பலா மரங்கள் நிறைய நிற்குமே. பலாப் பழங்கள் கிடைத்திருக்கும்”

“நாஞ்சில் ഖள்ளுவனைப் பார்த்தோம்”

“நல்லவன்”

“நல்லவனா? முழு மடையன்”

“என்ன?”

“கேளும் ஐயா கேளும், கீரைக்கறிக்கு மேலே துவக் கொஞ்சம் அரிசி கேட்டோம்”

“கொடுக்காமலா போனான்”

“மலை போன்ற யானையைக் கொடுத்தான். பிடி அரிசி கேட்டவர்க்கு பெரிய யானை அறியாமையல்லவா இது”

“மலை போன்ற மனம் உடையவன் என்பதைக் காட்டுகிறது”


49. பேகனின் பெருமை

பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார்.

“விறலி சூடும் மாலையும் பாணன் சூடும் பொற்றாமரையும் மார்பில் புரளக் கடுந் தேரை நிறுத்திக்