52
மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
காட்டிடை இளைப்பாறுகின்ற நீங்கள் யார்?” என்று கேட்கும் இரவலனே, சொல்லுகின்றேன் கேள்:
பேகனைக் காண்பதற்கு முன் நான் ஏழையாய் இருந்தேன். நான் பேகனைக் கண்ட பின்னரோ, எனக்குத் தேரும் கிடைத்தது. சீரும் கிடைத்தது.
பேகன் எப்படிப்பட்டவன் என்று கேள்:
ஒரு நாள் மயில் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் பேகன். அதன் ஆட்டத்தில் மனதைப் பறிகொடுத்தான். தன் பொன்னாடையை எடுத்து, மயிலின் மேனியைப் போர்த்தினான்.மயில் உடுத்தாது என்று தெரிந்தும் பரிசு கொடுத்த பேகன், உடுக்கவும் உண்ணவும் ஏங்கும் உனக்குப் பரிசு தராமல் இருக்க மாட்டான். எனெனில் அவன் மறுமையை நோக்கிக் கொடுப்பவன் அல்லன், இரவலர் வறுமையை நோக்கிக் கொடுப்பவன் என்றார் பரணர் பேகனின் பெருமையை நோக்கிச் சென்றான் பாணன்.
பேகன் இருக்கின்றானே, அவன் யாரைப் போன்றவன் என்று கேளுங்கள். மழையைப் போன்றவன் என்று நான் சொல்கிறேன் என்றார் பரணர்.
மழை சில பேருக்கு மட்டும் பெய்யுமோ? பெய்யாது அது வற்றிய குளத்தில், வயலில், உவர் நிலத்தில் எங்கும் பெய்யும் அது போன்றே, பேகன் கேட்போர்க்கெல்லாம் கேட்டபடி தருவான்.அது கொடைத்திறம் அல்ல வென்பீர்.ஆனால் அவன் படைத்திறம் தெரியுமோ?