பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



நான் அவனைக் கண்டதும் எழுந்து வணங்கினேன். அவன், கைகுவித்து, என்னை “அமர்க” என்றான். தன் கையிலிருந்த நிணத்தடி'யை கடைந்த நெருப்பிலிட்டுச் சுட்டுப் பக்குவப் படுத்தினான். பின்னர், அவ்வூனைத் “தின்னும்’ என்று எனக்குக் கொடுத்தான். நான் அதனை அமுதம் என்று எண்ணி விரைந்து தின்றேன். பசி தீர்ந்தது.

அருவி நீரைக் குளிரக் குடித்தபின், வேட்டுவர் தலைவனிடம் விடைபெறத் தொடங்கினேன்.

அவன் விடை தருவதற்குத் தயங்கினான். திடீரென்று. தன் மார்பிற் கிடந்த முத்து மாலையைக் கழற்றி என் கழுத்திற் போட்டான்.

“நான் காட்டில் திரிபவன், கொடுப்பதற்கு என்னிடம் வோென்றுமில்லை” என்று குரல் அடைக்கக் கூறினான்.

“உன் பெயர் என்ன?” வென்று கேட்டேன். அவன் பேசவில்லை.

“உன் ஊரென்ன?” என்று கேட்டேன். அதற்கும் அவன் ஒன்றும் உரைக்கவில்லை.

பின்னர் கல்ங்கிய கண்களுடன் அவனை விட்டு பிரிந்தேன்.

வழியில் சிலரைக் கண்டேன்...அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். அவர்கள் என்னிடம் கூறியது இது:

“அதோ தெரிகிறதே மலை, அதுதான் தோட்டிமலை. அம் மலைத்தலைவன் தான் உனக்கு