உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



உங்கட்கும் தலைவர்கள் உண்டல்லவா? அவர்களின் பண்புகளைக் கூறுங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்பதை நன்கு அறிவேன்.

எங்கள் தலைவனைப் பற்றி இன்னும் கேளுங்கள். எங்கள் தலைவன் வில் தொழிலில் வல்லவன். அகன்ற மார்பினன். கொல்லும் வேலினன். காந்தள் கண்ணியன். அவன் மலையில் மேகம் தங்கும். கலைமான் பெண் மானை அழைக்கும். இதனை ஆண் புலி செவி தாழ்த்திக் கேட்கும். அம்மலை நாட்டுத் தலைவனுக்கு எல்லாம் தகும்.

இவ்வாறு இளவெயினி என்னும் குறமகள் குறவர் தலைவனான ஏறைக்கோனைப் பாடினாள்.


61. குமணன் புகழ், குரங்குக்கும் தெரியும்

“முரசும், சங்கமும், முழங்கும்படி மூவேந்தருடன் போரிட்டான், பறம்பு மலைத் தலைவன் பாரி வெற்றித்தார் பூண்டு வில்லேந்திய ஒரி கொல்லி மலையை ஆண்டான். காரி என்ற கருங்குதிரையைச் செலுத்திப் போர் வென்றான் மலையன். குதிரை மலைத் தலைவன் அதியமான். பேகன் பெரிய மலை நாட்டு மன்னன். மோசி பாடப்பட்டான். ஆய் தேடி வந்தவர் வறுமையை போக்கினான். அவர்கள் எழு பெரும் புரவலர்கள் மாய்ந்த பின்னரும், அவர்தம் மரபைக் காக்க வல்லோன் என்றுரைக்கும் மாண்புடைய குமணனே, உன்னை நான் நாடி வந்தேன், நின் புகழ் பாடி வந்தேன்” என்றான் பாணன்.