பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

67


யாருக்கும் இடமில்லை. “ஆதனே, எந்தையே நீ வாழ்க! என் நெஞ்சைப் பிளப்பவர் அங்கே உன்னைத்தான் காண்பர். உன்னை நான் மறவேன். அப்படியே மறப்பதாயின் மறக்கும் நாள் நான் இறக்கும் நாளாக இருக்கும்”


71. கீரஞ்சாத்தன் வீரம் பெரிது!

கீரஞ் சாத்தன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பார்க்கச் சென்றார் ஆவூர் மூலங்கிழார். சாத்தன் பண்பு அவர் நெஞ்சைக் கவர்ந்தது.

கீரஞ்சாத்தன் உண்ணும் போது யாரேனும் போனால் இழுத்து உட்கார வைப்பான். இலை போடுவான். சோறு வைப்பான். உண்ணும்படி வற்புறுத்துவான். வந்தவர் உண்ட பின்னரே தான் உண்டான்.

போர்க் களத்தில் முன் நிற்பான். வீரர் சிலர் கள் குடிக்கும் போது வீரம் பேசி விட்டு களத்தில் புறங்காட்டி ஒட முயல்வர். கீரஞ்சாத்தன் அவர்களுக்கும் அரணாக நிற்பான். பகைவரையும் வெல்வான்.


72. “நீயும் வா”

தோயமான் மாறன் மாளிகை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார் மதுரைக்குமரனார். வழியில் பாணன் ஒருவன் எதிர்ப்பட்டான். புலவர் நெஞ்சம் நெகிழ்ந்தது.