68
மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
“பாணனே! நீ எம்மோடு வருக! தோயமான் மாறன் வரையாது கொடுக்கும் பெருமை உடையவனுமல்ல; இல்லை யென்று மறுக்கும் சிறுமையுடையவனும் அல்லன்.
நாம் அவனைக் கொண்ட கேட்கப் போவோம்! அவன் உலைக் களத்திற்குப் படைக் கருவி கேட்கப் போவான். அவன் உடலெங்கும் போர்ப்புண் பட்டவடுக்கள் மருந்து கொள்ளப்பட்ட மரம்போல் தோன்றுவான் வடுக்கள் அவனுக்கு வசை இல்லை. அவையே அவனுக்கு அழகு.”
அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர்.
பிறர்அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர் அயர்வு அற்றவர்.
தாம் வாழ வாழாது, பிறர் வாழ வாழும் பெருந்தகையாளர் அவர்!
அவராலன்றோ, உலகம் நிலை பெற்று வாழ்கின்றது!
ஆசிரியனுக்கு ஏற்படும் துன்பத்தைத் துடைக்க வேண்டும். வேண்டும் பொருளை விரைந்து கொடுக்க வேண்டும் அடங்கிக் கல்வி கற்றல் நல்லது. ஏன்? தாய்