பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

69


தன் வயிற்றிற் பிறந்த மக்களுள் கற்ற மகனையே விரும்புவாள்!

ஒரு குடியிற் பிறந்தவர்களுள், மூத்தவன் வருக என்று அழைக்காமல், கல்வி கற்றவன் வருக என்றே அவையினர் அழைப்பர் அறிவுடையோன் சென்ற வழியே அரசனும் செல்வான்.

நால்வகை சாதியாரில் மேல்சாதிக்காரர், கற்றிலராயின் தாழ்ந்தவராகி கெடுவர் கீழ்ப்பட்ட ஒருவன் கல்விகற்றிருப்பின், அவனை மேல் சாதிக்காரனும் வணங்குவான்.


75. முறையாகத் திறை கொள்க!

காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்!

நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து மிதிப்பது அதிகமாகவும் இருக்கும்.

ஆகையால் அரசனும் முறையறிந்து திறை கொண்டால் நாடு நிறைவு கொண்டு வாழும் இன்றேல் குறைவு கொண்டு விழும்!


76. ஒட்டுவோன் ஒட்ட வண்டி ஒடும்!

அழகிய சக்கரங்கள். உருண்டு திரண்ட அச்சு. வளைவில்லாத வண்டி. இளம் எருதுகள் பூட்டப்