உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


பட்டுள்ளன. வண்டியை இழுத்துச் செல்லத் துடித்துக் கொண்டிருக்கின்றன. வண்டி யோட்டி இல்லையே. வண்டியின் கதி? பள்ளத்தில் விழுந்து விடுமே. எல்லாம் நொறுங்கி விடுமே. ஆகா, அதோ வண்டிக்காரன் வந்துவிட்டான் தூள் துள்ளிக் குதித்து வண்டியில் ஏறுகிறான். வண்டி பறக்கப் பாய்ந்து ஓடுகிறது. அனால் இப்போது கவலை இல்லை.

உலகம் பெரிய வண்டி. அதனை ஒட்ட நல்ல வண்டிக்காரன் வேண்டும். அவன்தான் அரசன்-தலைவன். தலைவன் இல்லாவிடில் நாடு அழிவை நோக்கிச் செல்லும்.


77. உலகிற்கு உயிர் எது?

“ஒளவையே” காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய்” என்றான் மன்னன் அதிகமான்.

“ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது”

“வயல்களுக்குத் தண்ணிர் திறந்து விட்டிருக்கிறார்களா?”

“ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”

“அப்படியானால் அச்சமில்லை. நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்.”

“இல்லை அரசே இல்லை. நெல்லும் உயிரல்ல; நீரும் உயிரல்ல; மன்னனே நாட்டிற்கு உயிர் நீ தான். இந்நாட்டிற்கு உயிர். இதனை உணர்ந்து நடப்பதே உன் கடன்.”