பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

87


கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆம் வேறு எதுவும் நடந்திருக்காது.” என்றார் நப்பசலையார்.


99. புகழ் மூடும் தாழி

வளவன் இறந்துபட்டான் அவன் பூதவுடலைத் தாழியுள் வைத்து மூடினர். ஐயூர் முடவனார் இதை நேரிற் கண்டார். அவர், தாழி செய்து கொடுத்த குயவனைக் கூப்பிட்டார்.

“கலஞ் செய்வோனே! வளவன் பூதவுடம்பை மறைக்கும் தாழியைச் செய்துவிட்டாய். ஆனால், அவன் புகழ்உம்பை மூடும் தாழியைச் செய்ய உன்னால் இயலுமோ?

அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உலகையே திகிரியாக்கி, களிமண்ணாக்கி குழைத்து, ஒரு தாழி செய்ய வேண்டும். முடியுமா உன்னால்” என்று கேட்டார் ஐயூர் முடவனார்.


100. “சுட்டுக் குவி”

வாரிவழங்கும் வள்ளல் ஆய்அண்டிரன். யானை, குதிரை, தேரோடு பொருள் பல பாடுவோர்க்கு அளிப்பவன்.

அந்தோ! ஆய் உயிர் துறந்தான். அருமை மனைவியரும் உயிர் நீத்தனர். “சுட்டுக் குவி” என்பது போல் ஆந்தை அலறியது. சுடுகாட்டில் ஈம விறகு அடுக்கி அவனையும் அவன் துணைவியரையும் தீ வைத்துச் சுட்டுச் சாம்பலாக்கினர். கண்கலங்கினர் புலவர். கண்ணிர் விட்டுக் கதறினர். பசி வாட்டவே வேறு நாடுகளை நோக்கி நடந்தனர். புலவர் நிலை பேரிரக்கத்திற்குரியது.