உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


அவன் ஒரு கொள்ளை நோய். குடப் பாலைக் கெடுக்கும் சிறு மோர்த் துளி அவன். அவ்வீரன் தனித்துச் செல்கின்றான்.

பகைவர்கள் பட்டாளம் பட்டாளமாய் அப்படி அப்படியே வீழ்ந்து மடிகின்றனர் அவன் வீரம் என்னே!


105. கொள்கை மறவாத குமரன்

‘போய் வருகிறேன்.அம்மா’ என்றான் வீரன். 'போய் வா, ஆனால், கொள்கையை மறந்துவிடாதே” என்று சொல்லிக் கொண்டே வழி கூட்டி அனுப்பினாள் தாய்.

கூரிய வேலை கைப்பிடித்தான். புலி போன்று போர்க்களம் புகுந்தான். பகை வீரர் பெருங்கடல் போல் சூழ்ந்தனர். முன்னணிப் படையைப் பிளந்து ஊடறுத்துச் சென்றான். பகைக் கூட்டம் பிணக் குவியல் ஆனது. ஐயோ, அந்த மறவனும் பட்டு வீழ்ந்தான். பகைவரால் சிதைக்கப்பட்டான்.

போர்க்களம் சென்றாள் மறத்தி. சிதைந்து கிடந்த மகன் உடலைக் கண்டாள். தன் கொள்கை தவறாத குமரனுடைய தாய் என்பதாலே பெருமிதம் கொண்டாள். மகிழ்ச்சிப் பெருக்கால், வற்றிய மார்பில் பால் சுரந்தது.


106. அருவிலை நல்லணி

வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ணகனார்.