பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

95


112. கேடயம் தா

மறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத் தருக” என்று துடிதுடித்துக் கொண்டிருந்தான்.

புலவர் அரிசில் கிழர் அவ்வழியே வந்தார். நேற்று கொல்லப்பட்ட மறவனையும் அவன் தம்பியையும் நன்கு அறிந்திருந்தார். இங்கே துள்ளிக் கொண்டிருக்கும் மறவனைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்தது. ஏன் தம்பி வீணாகக் கத்துகிறாய். நீ கேடயத்தோடு போய் கல்மறைவில் நின்றாலும் தப்பமாட்டாய். நீ போரில் கொன்றாயே, அவன் தம்பி கண் சிவந்து அலைகிறான். உன்னைத் தேடி அலைகிறான். போரிட எண்ணாதே. ஒடி ஒளிந்துகொள்” என்றார். வீண் பெருமை அடித்த மறவன் விக்கிப் போனான்.


113. வீரத்தாய் கூறினாள்

“அம்மா” என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன்.

“கண்மணி, உட்கார்” என்றாள் தாய். “சொல்வதைக் கவனமாகக் கேள். மகனைப் பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடன். அதனைச் செம்மையாகச் செய்து விட்டேன். கல்வி அளித்துச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன். உன் தந்தையும் தன் கடமையைச் செய்துள்ளார்.