உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

“இயற்கையாக எழுகின்ற கண்ணிமைப் பொழுதும், கைந்நொடிப் பொழுதும் மாத்திரை எனப்படும்.”

இ, உ, ஒ, க, ங, ட, ண-இவைகள் உயிர்க்குறிலும், உயிர்மெய்க் குறிலுமாகும். இவற்றிற்குத் தனித்தனி மாத்திரை ஒன்று.

ஆ, ஐ, ஒள, சா, டூ, தே-இவைகள் உயிர் நெடிலும், உயிர்மெய் நெடிலுமாகும். இவற்றிற்குத் தனித்தனி மாத்திரை இரண்டு.

க், ஞ், ட், ந், ர், ன்-இவைகள் மெய்யெழுத்துக்கள். இவற்றிற்குத் தனித்தனி மாத்திரை அரை. ஃ இது ஆய்தவெழுத்து. இதற்கு மாத்திரை அரை.

“குற்றெழுத்திற்கு ஒரு மாத்திரையும், நெட்டெழுத்திற்கு இரண்டு மாத்திரையும், மெய்யெழுத்திற்கும், ஆய்தவெழுத்திற்கும் தனித்தனி அரை மாத்திரையும் அளவாம்.”

பயிற்சி

1இனவெழுத்தென்றால் என்ன? எவ்வெவ்வெழுத்து எவ்வெவ்வெழுத்திற்கு இனவெழுத்தாகும்?
2ஐ, ஒள என்ற எழுத்துக்களின் இனவெழுத்துக்கள் யாவை? அவை எவ்வாறு பொருந்தும்?