உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


வள்ளியம்மை செய்தாள் - இது பெண்பால் உடன்பாட்டு வாக்கியம். அவர்கள் செய்தனர் - இது ப ல ர் பா ல் உடன்பாட்டு வாக்கியம். அது செய்தது - இது ஒன்றன்பால் உடன் பாட்டு வாக்கியம். அவை செய்தன - இது பலவின்பால் உடன் பாட்டு வாக்கியம். எண் அவன் செய்தான், அவள் செய்தாள், அது செய்தது- இவை ஒருமை உடன்பாட்டு வாக்கியங்கள். அவர் செய்தனர், அவை செய்தன- இவை பன்மை உடன்பாட்டு வாக்கியங்கள். இடம் நான் செய்தேன் - இது தன்மை உடன்பாட்டு வாக்கியம். நி செய்தாய் - இது முன்னிலை உடன்பாட்டு வாக்கியம். அவன் செய்தான்- இது படர்க்கை உடன்பாட்டு வாக்கியம். மேற்கூறிய வாக்கியங்களெல்லாம் இ ற ந் த காலத்தில் வந்த உடன்பாட்டு வாக்கியங்கள். நிகழ் காலம், வருங்காலம் என்ற இரண்டிற்கும் இவ்வாறே ஒட்டிக் காண்க.