113
ருேரின் வாக்கை மக்கள் அறவே மறந்துவிட்டனர் இதில் வந்த பழமொழி மருந்தேயாயினும் விருந்தோடு உண் என்பதே. இது விருந்தோம்பலின் தன்மையை
நன்கு விளக்குகின்றது.
இவ்வாறு உவமைகளும், பழமொழிகளும் கருத்துக் களை நன்கு தெளிவு படுத்துவதற்கு உபயோகப்படும்.
10. நிறுத்தக் குறிகள் (திருப்பல் கீழ்க்கோடிடல், இடைப் பிறவைப்புக்குறி)
1951ஆம் ஆண்டு பாரிசுக்கு அடுத்த சேவ் என்னும் நகரில் ஒரு கல்வி மாநாடு நடந்தது அம்மாநாட்டிற்குச் சென்னை அரசினர் சார்பில் நான் சென்றேன் கண் டேன் களித்தேன் அம்மாநாட்டைக் கூட்டியது ஐக்
கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான கலைக் கழகம் ஆகும்
பட்டையுரிக்கப்பட்ட மரங்களையோ மொட்டை யடிக்கப்பட்ட மரங்களையோ நான் நம் நாட்டிலன்றி வேறு எங்கும் பார்க்கவில்லை என்று கூறுகிருர் சுந்தர வடிவேலார்
மேற்கண்டவற்றிற்கு நிறுத்தக் குறிகள் வைத்துப் பின் கீழ் வருவதை ஒப்புநோக்குக.
1951-ஆம் ஆண்டு பாரிசுக்கு அடுத்த 'சேவ்' என் னும் நகரில் ஒரு கல்வி மாநாடு நடந்தது. அம்மாநாட் டிற்குச் சென்னை அரசினர் சார்பில் நான் சென்றேன்: கண்டேன்; களித்தேன். அம்மாநாட்டைக் கூட்டியது 'ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலைக்கழகம்'
ஆகும.