127
இளைஞர் செயல்முறைகளும் இயக்கங்களும் பற்றிய கட்டுரைகள்
(இத்தலைப்பில் மாணவர் கூட்டுறவுச் சங்கம், சாரணர் இயக்கம், செஞ்சிலுவைக் கழகம், ஏ. சி. சி., யன். சி. சி., முதலியவை சாரும்.)
செஞ்சிலுவைக் கழகம்
குறிப்பு:- முன்னுரை - பெயர்க் கார ண ம் - ஏ. ற் ப ட் ட
வரலாறு - பிரிவு - நன்மை - முடிவு.
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல கழகங் கள் இருக்கின்றன. ஒரு கழகம் கல்விக்கு உழைக்கிறது. இன்னென்று மதத்திற்குப் பாடுபடுகின்றது. மற் ருென்று பொது நலத்துக்கு உழைக்கின்றது. பிறி தொன்று உலக சமாதானத்திற்கு வேலை செய்கின்றது. இவைபோல் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம், ஏ. சி. சி, யன். சி. சி முதலிய பல கழகங்கள் உள்ளன. இவை நாட்டின் பொது நன்மையைக் கவனிக்கின்றன.
செஞ்சிலுவைச் சங்கத்தார் நீண்ட வெண்மையான மேல் அங்கி அணிந்திருப்பர். அதில் செந்நிறமுள்ள சிலுவை ஒன்று அணிந்திருப்பர். ஆகவே அவர்களின் கூட்டம் செஞ்சிலுவைக் கழகம் என்று பெயர் பெற்றது.
இக்கழகம் 1864-ஆம் ஆண்டு தோன்றியது. இதைத் தோற்றுவித்தவர் வென்ரிடியூனன்ட்டு என் பவர் ஆவார். இவர் சுவிட்சர்லாண்டு நாட்டவர். இவர் சினிவாவில் இருந்தார். ஆகவே அங்கே இக் கழகம் தோன்றியது. இதன் நோக்கங்கண்டு பல தேயங்கள் இதில் கலந்தன.