இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
133
நடை வகையாலும் பொருள் வகையாலும் உயர்நிலைக் கடிதங்கள் எழுதுதல்
יונ6 (II- Güנ6 13–12–57. அன்பார்ந்த நண்பரே,
வணக்கம் பல. இவண் யாவரும் நலம். இது
போல் அவண் யாவரின் ந ல மு ங் காண விழை கின்றேன்.
இவ்வுலகிற் காணப்படும் பல பிறப்புக்களில் மனிதப் பிறப்பே மேலானதாகும். நன்மை, தீமை பகுத்தறியும் அறிவால் இவன் மேம்பட்டவனுகின்ருன்.
மனிதப் பிறவியிலும் கூன், குருடு, செவிடாகிய அங்க ஈனமில்லாத அழகிய உருவத்தை யடைந்திருக் கின்ருன். அவ்வழகிய உருவு தந்த எல்லாம் வல்ல இறைவனை வழுத்த வேண்டும், ஒவ்வொரு நாளும் அவனை நாம் வணங்குவதே நம் பகுத்தறிவினுலாகிய பயனுகும்.
இது போன்ற கடிதங்கள் பல எனக்கெழுதும் படித் தங்களை வேண்டுகின்றேன்.
அன்பான நண்பன்,
இ. மு. அருணசலம்.