135
தரையை நோக்கி வரும் எங்களை மக்கள் 'மழைத் துளி என்றனர். மலையில் மேடான ப க் க த் தி ல் விழுந்து பள்ளமான பக்கத்தை நோக்கியதும் எங்கள மக்கள் "அருவி' என்றனர். சமதளத்தில் வரும்பொழுது ஆறு என்றனர். அதன்பின் கால்வாய், சிறு குளம், பெருங்குளம், வடிகால், நீர்த் தேக்கம் என்ற பல பெயர்களை அடைந்து கடலை வந்தடைந்தோம். அது வரை பிரிந்திருந்த என் தாயாராகிய கடலைக் கண்டதும் நான் மிக மகிழ்ந்தேன்.
கூட்டங்கள் பற்றி அறிக்கைகள் எழுதி நிகழ்ச்சி நிரலுடன் பதிவு செய்து வைத்தல்
வள்ளுவர் கழகம்
1958-ஆம் வருடம் சனவரி மாதம் 15-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேற்கூறிய கழகத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும். அதுகால் பசுமலே உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரிர் வித்துவான் உயர்திரு V. P. நடராசனவர்கள் தலைமை தாங்குவார்கள்.
சங்கரநையினர் கோவில் பெரு நாட்டாண்மை உயர்நிலைப் பள்ளியின் தலைமைத் த மி ழா சி ரி ய ர் வித்துவான் உயர்திரு முத்துராக்கக் கோனர் அவர்கள் வள்ளுவரும் வாய்மையும்' என்ற பொருள் பற்றிப் பேசுவார்கள்.
அது சமயம் வந்து கூட்டத்தைச் சிறப்பித்தருள யாவரையும் வேண்டுகின்றேன்.
சுந்தரம்,
இயக்குகர்.