உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


" விரைவிலுைம், மிகுதியினுலும், தெளிவினுலும். இம் மூன்று காரணங்களுமில்லாமல் இயல்பினுலும் மூன்று காலங்களும் ஒன்று மற்ருென்ருக மாற்றிச் சொல்லவும் படும்' சூத்திரம்: “ விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் பிறழவும் பெறு உம் முக் காலமும் ஏற்புழி' 4. ஒரு பொருட் பன்மொழி மீ மிசை ஞாயிறு- இதில் மீ என்ருலும் மிசை என்ருலும் மேல் என்பதே பொருள். இவைகள் ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள். புனிற்றிளங்கன்று- இதில் புனிறு, இளம் என்ற சொற்கள் ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள். இவைகள் ஒரு பொருட் பன்மொழி அல்லது மீ மிசைச் சொல் என்று வழங்கப்பெறும். "ஒரு பொருளைக் குறித்து வருகிற பல சொற்கள் அவ்வாறு வருவதற்குக் காரணம் இல்லையாயினும் சிறந்து நிற்பதால் அவை மரபுவழுவென்று நீக்கப் படாது. வழுவமைதி என்று கொள்ளப்படும்'. சூத்திரம்: “ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா" 5. இரட்டைக்கிளவி - அடுக்குத் தொடர் (வேறுபாடுகள் உட்பட) இரட்டைக்கிளவி ஆற்றில் நீர் சலசலவென ஓடுகின்றது - இதில் சல என்ற சொல் தனித்து வழங்காது. ச ல ச ல வென்றே வழங்கும். இதுபோலவே மழமழவென்று