பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. பொது சொல் விலக்கணம் கூறுதல் 1. சொல்லிலக்கணம் கூ று. த ல | வ து, ஒரு தொடரில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இலக் கணம் கூறுதலாம். அதாவது, பெயர்ச் சொல்லுக்குத் தினே, பால், எண், இடம், வேற்றுமைகளையும் முடி பையும் வினேச்சொல்லுக்குத் தினே, பால், எண், இடம், வினே, வகை, காலம் ஆகிய இவற்றையும் கூறுவதாம். (உ-ம்) முருகன் வள்ளியைக் கண்டான். முருகன் - பெயர்ச்சொல், உயர்திணை, ஆண் பால், ஒருமை, படர்க்கை, முதல் வேற்றுமை, கண்டான் என்னும் பயனிலைக்கு எழுவாய் வந்துள்ளது. வள்ளியை-பெயர்ச் சொல், உயர்திணை, பெண்பால், ஒருமை, படர்க்கை, இரண்டாம் வேற்றுமை, கண் டான் என்னும் பயனிலைக்குச் செயப்படுபொரு ளாய் வந்துள்ளது. கண்டான் - வினைமுற்று, செய்வினை, இறந்த காலம், உயர்திணை, ஆண் பால், ஒருமை, படர்க்கை, * முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலை யாவிற்று. கேள்விகள் 1. சொல்லிலக்கணம் கூறுதலாவது யாது ? 2. பெயர்ச் சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் எவ் வெவற்றைக் குறிப்பிட வேண்டும் ?