பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எழுத்து 1. மொழி உண்டாவதற்கு முதற்காரணமாகிய அணுத்திரளின் ஒலி எழுத்தாகும். அ.து ஒலி வடி வில் இருக்கும்போது ஒலி வடிவு எழுத்து என்றும் வரி வடிவில் இருக்கும்போது வரி வடிவு எழுத்து என்றும் பெயர் பெறும். (உ-ம்) பேசுவது ஒலி வடிவு எழுத்து எழுதுவது வரி வடிவு எழுத்து 2. இவ்வெழுத்து முதல் எழுத்து சார்புஎழுதது என இரு வகைப்படும். நன். சூ. மொழிமுதற் காரண மாம்அணுத் திரள்.ஒலி எழுத்து, அதுமுதல்சார் பெணஇரு வகைத்தே. 3. முதல் எழுத்து என்பன உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் ஆகும். நன். சூ. உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே. 4. சார்பெழுத்துப் பத்து. அவற்றுள் உயிர் மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய இங்கான்கை மட்டும் இவ்வகுப்பில் கற்போம்.