பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f G3 6. குற்றியலுகரம், குற்றிய லிகரம், மெய் யெழுத்து, ஆய்த எழுத்து ஆகிய இவற்றிற்கு மாத் திரை அரையாம். 7. உயிர்க் குற்றெழுத்திற்கும், உயிர்மெய்க் குற் றெழுத்திற்கும் மாத்திரை ஒன்ரும். 8. உயிர் நெட்டெழுத்துக்கும், உயிர்மெய் நெட் டெழுத்துக்கும் மாத்திரை இரண்டாம். குறிப்பு : (1) அவ்வவ்வெழுத்திற்குச் சொன்ன மாத்திரையின் அளவை மாணவர்கள் உச்சரித்து உணர்ந்துகொள்க. (2) பண்டம் மாற்றும் போதும், அழும் போதும், பாடும்போதும், கூப்பிடும்போதும் எழுத்துக்கள் தமக்குச் சொன்ன மாத்திரையினின்றும் நீண்டு ஒலிக்கும். கேள்விகள் மாத்திரையாவது யாது ? மாத்திரைக்கு அளவு யாது ? எவ்வெவற்றிற்கு மாத்திரை அரை ? . ஒரு மாத்திரை அளவுள்ள எழுத்துக்கள் எவை ?

5. எவற்றிற்கு இரண்டு மாத்திரைகள் உண்டு ? 6. மாத்திரையின் அளவை எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும் ? 7. எழுத்துக்கள் எப்போது தமக்குச் சொன்ன மாத் திரையளவிலிருந்து நீண்டு உச்சரிக்கும்?