பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள் ரண்டும் மொழிக்கு முதலாய் வரும். (உ-ம்; அழகு, ஆடை, இலை, ஈசல், உரல், ஊா: எது, ஏணி, ஐந்து, ஒன்று, ஒனன்; ஒளவையார். 10. மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலாப் வரமாட்டா; ஆனால், உயிர் எழுத்துக்களோடு கூடி உயிர்மெய்யாகி மொழிக்கு முதலாய் வரும். அப் பொழுதும் எல்லா மெய்களும் உயிருடன் கூடி மொழிக்கு முதலாய் வாரா. க், ச், த், ந், ப், ம், வ், ப், ஞ், ங் என்னும் மெய்கள் மட்டும் உயிருடன் கூடி மொழிக்கு முதலாப் வரும். ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் மெய்யெழுத்துக்கள் உயிருடன் கூடியும் மொழிக்கு முதலாப் வாரா. (உ-ம்) கல், சக்கை, தண்டு, நகம், படம், மரம், வயல், யாளி, ஞாயிறு, நன்ம். குறிப்பு: டங்கா, ராமன், லாடம் என்னும் இச்சொற். களில் ட், ர், ல் என்னும் எழுத்துக்கள் மொழிக்கு முதலாய்: வருகின்றனவே எனில், இவை தமிழ் மொழி அல்ல வேறு: மொழிகள் என்று உணர்க. நன். சூ. பன்னி ருயிரும் கசதந பமவய ஞவி ரைந்துயிர் மெய்யும் மொழிமுதல் கேள்விகள் 1. எவ்வெழுத்துக்கள் மொழிக்கு முதலாய் வரும்: 2. எவை மொழிக்கு முதலாய் வரமாட்டா ?