பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சுட்டெழுத்து 5. மேற்கூறப்பட்ட பன்னிரண்டு உயிர் எழுத் துக்களில் ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவதற்காகச் சில எழுத்துக்கள் உபயோகப்படுகின்றன. அவை, அ, இ, உ என்பன. இம்மூன்றும் சுட்டு எழுத்துக்கள் எனப்படும். குறிப்பு : உ என்னும் சுட்டெழுத்து, பேச்சு வழக்கில் வராது, அ.இ என்னும் சுட்டெழுத்துக்கள் அந்த இந்த என்று திரிந்து வரும். (உ-ம்) அவன், அது, அவ் வீடு, அந்த வீடு இவள், இவை, இவ் வீடு, இந்த வீடு கேள்விகள் சுட்டாவது யாது ? சுட்டெழுத்துக்கள் எத்தனே ? அவை எவை ? பேச்சு வழக்கில் வராத சுட்டெழுத்து எது ? . சுட்டெழுத்துக்கள் எப்படித் திரிந்து வரும் ? பயிற்சி-2 1. சுட்டெழுத்து அமைந்த சில சொற்களைக் கூறுக. 2 கோடிட்ட இடங்களில் தக்க சுட்டெழுத்தோடுபொருந் திய சொல்லை அமைக்க : வீட்டிலேதான் , - குடி யிருந்தான். - ஒரு நல்ல வீடு. -- காற்று அதிகம். பின்புறம் மரங்கள் அதிகம். - நல்ல காற்றைத்தரும், நான்தான் - வெட்ட வேண்டா என்றேன். வெட்ட எண் ணி னர்.