பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1 # 5. பகுபத உறுப்புக்கள் ஆறு. அவை பகுதி. விகுதி, இடைவிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன. 6. பகுபதம் பெயர்ச்சொல்லிலும், வினைச்சொல் லிலும் மட்டும் வரும். 7. பகுதியாவது, பகுபதத்தின் முதலில் நிற்கும் பகாப்பதமாகிய உறுப்பாம். (உ-ம்; கூணன் = கூன் - அன் குறிப்பு: இப்பகுதி இரு வகைப்படும். அவை பெயர்ப் பகுதி, வினைப்பகுதி என்பன. பெயர்ப் பகுதி என்பது, பெயர்ச்சொல் பகுதியாக வருவதாம் ; வினைப்பகுதி என்பது, வினைச்சொல் பகுதியாக வருவதாம். 8. விகுதியாவது, பகுபதத்தின் ஈற்றில் கிற்கும் பகாப்பதமாகிய உறுப்பாம். - (உ-ம்) கூனன் = கூன் + அன் 9. இடைகிலேயாவது, பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பாம். (உ.ம்) ஒதுவான் = ஒது - வ் - ஆன் குறிப்பு : இவ்விடைநிலை, பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இருவகைப்படும். பெயர் இடைநிலை காலங் காட்டாது. வினே இட்ை நிலை காலங் காட்டும். (உ-ம்) வலைச்சி = வலை - ச் - சி - பெயர் இடைநிலை. செய்தான் = செய் + த் + ஆன்-வினை இடைநிலை,