பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F í 8 ஆகு பெயர் 22. ஒன்றன் இயற்பெயர் அதளுேடு சம்பந்த முடைய மற்ருெரு பொருளுக்கு ஆகி வருவது ஆகு பெயராம். . (உ-ம்) வெள்ளை அடித்தான்-இங்கு வெள்ளை என்னும் நிறத்தை உணர்த்தும் இயற். பெயர். அதனே டு சம்பந்தமுடைய வெள்ளை நிறத்தையுடைய சுண்ணும்பை உணர்த்தி நின்றமை உணர்க. 23. இவ் வாகுபெயர் பல வகைப்படும். அவத் றுள் சில: பொருளாகுபெயர், இடவாகுபெயர், கால வாகுபெயர், சினே ஆகுபெயர், குண வாகுபெயர் தொழிலாகு பெயர், அளவை ஆகுபெயர், தானி யாகுபெயர், கருத்தாவாகுபெயர், உவம ஆகு பெயர் என்பன. 24. பொருளாகு பெயரா வ து, முதற்பொருள் அதன் சினேக்கு ஆகி வருவது. (உ-ம்) தாமரைப் பாதம்-இங்கு தாமரை என் பது கொடியை உணர்த்தாமல் அதன் பூவை உணர்த்தினமை அறிக. குறிப்பு: பொருளாகு பெயர்க்கு முதலாகு பெயர் என் னும் மற்ருெரு பெயரும் உண்டு.