பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 27 (உ-ம்) வாளால் வெட்டினுன்-கருவிப் பொருள். அரசனுல் கட்டப்பட்டது-க ரு த் த ப் பொருள். தந்தையோடு சென்ருன் - உடனிகழ்ச்சிப் பொருள். குறிப்பு : (1) கருவி இரண்டு வகைப்படும். அவை முதற் கருவி, துணைக்கருவி என்பன. முதற்கருவி என்பது பொருளை விட்டு நீங்காதது. துணைக்கருவி என்பது அப் பொருளுக்குத் துணையாக வருவது. (உ-ம்) மண்ணுல் செய்த குடம்-முதற் கருவி. உளியால் செய்த மத்து-துணைக்கருவி. (2) கருத்தா ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரண்டு வகைப்படும். (உ-ம்) அரசனுல் மேசை செய்யப்பட்டது-ஏவு தற் கருத்தா. தச்சனுல் மேசை செய்யப்பட்டது-இயற் றுதல் கருத்தா. (3) முதல்வேற்றுமைக் கருத்தாவிற்கும்மூன்ரும்வேற் றுமைக் கருத்தாவிற்கும் வேறுபாடு உண்டு. முதல் வேற். றுமைக்கருத்தா செய்வினை கொண்டு முடியும். மூன்ரும் வேற்றுமைக்கருத்தாசெயப்பாட்டுவினைகொண்டுமுடியும், (உ-ம்) கந்தன் பாடம் படித்தான்-செய்வினை கொண்டு முடிந்தது.