பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

அவை க், ச், ட், த், ப், ற் என்பன. இவற்றை வலி என்றும் வன்கணம் என்றும் கூறுவர்.

மெல்லினம்

10. மெல்லினம் என்பது மென்மையான ஓசை உடையது. மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறு. அவை ங், ஞ், ண், ங், ம், ன் என்பன. இவற்றை மெலி என்றும், மென்கணம் என்றும் கூறுவர்.

இடையினம்

11. வன்மையான உச்சரிப்பும் மென்மையான உச்சரிப்பும் அல்லாமல் இடைத்தரமான உச்சரிப்பு உடையது இடையினம். இடையின மெய்யெழுத்துக்கள் ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறாம். இவற்றை இடை என்றும் இடைக்கணம் என்றும் கூறுவர்.

கேள்விகள்
1. மெய் என்பதற்குப் பொருள் யாது ?
2. மெய்யின் தன்மை யாது ?
3. மெய்யெழுத்தாவது யாது? மெய்யெழுத்துக்கள் யாவை ? அவற்றின் அடையாளம் யாது ?
4. மெய்யெழுத்தின் வகை எத்தனை ? அவ்வகைக்குக் காரணம் யாது ?
5. வலி, மெலி, இடை - இவற்றை விளக்குக.
6. இம்மூன்று வகையும் வேறு எவ்வெவ்வாறும் வழங்கப்பெறும் ?