பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III, புணர்ச்சி مسسrسمسسسسمسoمینه 1. புணர்ச்சியாவது, கிலேமொழியீறும் வருமொழி' முதலும் ஒன்றுபடப் புணர்வதாம். (உ-ம்) மணி - அழகு - மணியழகு. 2. இப்புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி, அல் வழிப் புணர்ச்சி என இரண்டு வகைப்படும். 3. வேற்றுமைப் புணர்ச்சியாவது, இரு சொற்கள் ஒன்ருேடொன்று புணர்கையில் வேற்றுமை உருபு களைப் பெற்றேனும் பெருது அவ்வுருபுகள் மறைந் தேனும் புணர்வது. (உ-ம்) வேல் + ஐ-தாங்கினன் = வேலைத் தாங்கினன். -வேற்றுமை உருபு வெளிப்படையாய் நின்ற வேற்றுமைப் புணர்ச்சி. வேல்-கையன் = வேற்கையன் - வேற்றுமை உருபு மறைந்து நின்று புணர்ந்த வேற் றுமைப் புணர்ச்சி. 4. அல்வழிப் புணர்ச்சியாவது இரண்டு சொற் கள் புணரும்போது வேற்றுமை அல்லாத வழியில் புணர்வது. (உ-ம்) ஒடி-வந்தான் = ஓடி வந்தான்-இச்சொற் w களுக்கிடையே எதுவும் மறைந்திலது.