பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 3. யக்ரமெய்யும், வகரமெய்யும் எவ்வெப்போது வரும் ? 4. ஏ என்பதன் முன் எப்பொழுது யகரமெய் தோன் றும் ? எப்பொழுது வகரமெய் தோன்றும் ? 5. எவ்வெவ்வீற்றுச் சொற்கு உதாரணம் காட்டப் படவில்லை ? ஏன் ? பயிற்சி-21 1. கீழ் வருவனவற்றைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக : மணியடி, நீயிரு, தலையோடு, பூவழகு, பலவாடுகள், தேவாரம், நீயேயுணர், கலாவரங்கம், சோவரண், கோயில், மாவிலை, அணியணியாக, பையொழுங்கு, பறவையிறகு. 2. யகர வகர உடம்படு மெய்க்குத் தனித்தனி ஐந்தைந்து உதாரணம் எழுதுக. வந்த எழுத்து மிகுதல் 8. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துக் களேனும் அவ்வெழுத்துக்களின் வர்க்கமேனும் வரின், வந்த எழுத்திலுள்ள மெய்யெழுத்து மிகும். (உ-ம்) ஒடி-கண்டான் ஒடிக்கண்டான் தேட-சென்ருன் தேடச்சென்ருன் பேரா-தட்டு பேராத்தட்டு தை-பொங்கல் தைப்பொங்கல் மெய் திரிதல் 9. ண், ன் என்னும் மெய்களின் முன் க, ச, த, ப, என்னும் வல்லினம் வந்தால், சில இடங்களில் ண், ட் ஆகவும், ன், ற் ஆகவும் திரியும்.