பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 (உ-ம்) மண் - குடம் = மட்குடம் பொன் - பலகை = பொற்பலகை 10. கிலேமொழியீற்றில் ல், ள் என்னும் மெய் கள் இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப வரின், ல், ற் ஆகவும், ள், ட் ஆகவும் திரியும். (உ-ம்) பல் - பொடி = பற்பொடி கள் - குடம் = கட்குடம் ஒன்று இரட்டித்து மிகுதல் 11. டு, று என்னும் எழுத்துக்களே ஈற்றில் உடைய நெடிற்ருெடர்க் குற்றியலுகரங்களுக்கும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களுக்கும் பிறகு, வல்லினம் வரின், அவ்வுகரமேறிய மெய் இரட்டித்து வரும் வல்லினம் மிகும். (உ-ம்; நாடு - காவல் = நாட்டுக்காவல் ஆறு + கால் : ஆற்றுக்கால் நெடிற்ருெடர்க் குற்றியலுகர மெய் இரட்டித்து, வலி மிகுந்தது. முரடு - பையன் = முரட்டுப்பையன் களிறு - தோல் = களிற்றுத் தோல் உயிர்த்தொடர்க் குற்றுகர மெய் இரட்டித்து, வலி மிகுந்தது. - கேள்விகள் எத்தொடர்க் குற்றியலுகர மெய் இரட்டித்து வலி மிகும்? பயிற்சி - 22 சேர்த்து எழுதுக -- - மிடறு+கருமை,நாடு+பாடல், வயிறு- குத்தல், ஆடு - கால், வீடு + கதவு, வெளிறு - குணம், காடு-கட்டை இ. 10;