பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சொல் 1. நாம் இதுவரையில் எழுத்துக்களேப் பற்றி ஒருவாறு படித்தோம் : இனிச் சொல்லப் பற்றிப் படிப்போம். சொல்லாவது, எழுத்துக்கள் தனியாக இருந்தாகிலும், ஒன்ருேடொன்று சேர்ந் தாகிலும் பொருள் தருவதாம். (உ-ம்) ஈ, நீ-ஓர் எழுத்துத் தனித்து நின்று பொருள் தந்த சொற்கள். ஈகை, நீங்கள்-பல எழுத்துக்கள் சேர்த்து பொருள் தந்த சொற்கள். குறிப்பு சொல், மொழி, பதம், வார்த்தை என்பவை ஒரே பொருளுடையவை. கேள்விகள் 1. சொல்லாவது யாது ? 2. அஃது எவ்வெவ்வாறு வரும் பயிற்சி - 7 1. நீ ஒடிப்போ, இங்கே வா, ஈ ஒரு பறவை, பூக்கொண்டு வா. இஃது ஒரு மாமரம். இவற்றுள் இவை ஒர் எழுத்து மொழிகள், இவை பல எழுத்துக்கள் சேர்ந்து வந்த மொழிகள் என்பதைக் குறிப்பிடுக.