பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பயிற்சி 10 கீழ் வருவனவற்றுள் வந்துள்ள பெயர்ச் சொற்கள் இன் னின்ன பாலைச் சேர்ந்தவை எனக் குறிப்பிடுக : 1. கமலம் பாட்டுப் பாடுவாள். 2. இடையன் மாடு மேய்ப்பான். 3. தாதிகள் அரசியோடு வந்தார்கள். 4. தோட்டத்தில் மலர்களைப் பறித்தனர். பழம் வாங் தினேன். 5. மரங்களில் இலையும், பூவும், காயும், கனியும் நிறைந் திருந்தன. . சோலையில் சீமான் சீமாட்டிகள் உலாவுகின்ருர்கள். 7. சிறுவர்கள் ஊதலை ஊதிக்கொண் டிருநதார்கள். 6 7 8. சோலைக்குக் காவற்காரன் ஒருவன் உண்டு. 9. தண்ணீர் ஊற்றும் பெண்களும் உண்டு. {} . அங்கு மேடைகள் பல. எண் 21. எண் என்பது, பொருள்களின் எண்ணிக் கையாம். அஃது இரண்டு வகைப்படும். அவை ஒருமை, பன்மை என்பன. 22. ஒருமையாவது ஒன்றை மட்டும் குறிப்பது. (உ-ம்) மனிதன், மிருகம், பறவை. 23. பன்மை என்பது ஒன்றுக்கு அதிகப்பட்ட வற்றைக் குறிப்பது. (உ-ம்) மனிதர்கள், மிருகங்கள், பறவைகள்.