பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வினேச்சொல்வின் வகை 44. வினைச்சொல் பலவகைப்படும். அவற்றுள் இங்குச் செயப்படு பொருள் குன்றிய வினை, கிசயப்படு பொருள் குன்ருவினை, ஏவல் வினை. வியங்கோள் வினை என்பவை பற்றிப் படிப்போம்: 45. செயப்படுபொருள் குன்ருவினை என்பது, செயப்படு பொருளைப் பெருத வினையாம். குறிப்பு: வினைமுற்றின் முன் யாரை அல்லது எதை என்பவற்றுள் ஏற்ற ஒன்றை அம்ைத்துக் கேள்வி கேட்கும் போது வரும் விடையே செயப்படுபொருள் எனப்படும். விடையைப் பெருத வினை செயப்படுபொருள் குன்றிய வினே விடையைப்பெரும் வினை செயப்படுபொருள் குன்ரு (உ-ம்) கந்தன் வந்தான். (செயப்படுபொருள் குன்றிய வினை.) குறிப்பு : "யாரை வந்தான்? எதை வந்தான்? என்னும் கேள்விக்கு விடை வாராமையை உணர்க. 46. செயப்படுபொருளேப் பெற்று வரும் வினே செயப்படுபொருள் குன்ருவினையாம். (உ-ம்) கந்தன் படித்தான். குறிப்பு : எதைப் படித்தான் ? என்னும் கேள்விக்குப் படத்தை என்னும் பதில் வருதல் காண்க. ஆதலின், இது செயப்படு பொருள் குன்ரு வினையாம். கேள்விகள் な 1. வினைச்சொல் எத்தனை வகைப்படும்.