பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii, சொல் சொல் அல்லது பதம் 1. பதம் இரண்டு வகைப்படும். அவை பகாப் பதம், புகுபதம் என்பன. 2. பகாப்பதமாவது, பகுதி முதலிய உறுப்புக்க ளாகப் பிரிக்க முடியாத நிலையில் வருவது. (உ-ம்) நான், மாடு, நில். 3. பகுபதமாவது, பகுதி முதலிய உறுப்புக்க ளாகப் பிரிக்கக்கூடிய பதம். (உ-ம்) பொன்னன் - பொன் - ன் -- அன் மதுரையான் - மதுரை - ய் + ஆன் கேள்விகள் 1. சொல்லுக்குரிய வேறு ஒரு பெயர் என்ன ? 2. பதம் எத்தனே வகைப்படும் ? 3. பகுபதம், பகாப்பதம் என்பவற்றை விளக்குக. 4. பகுபதத்தை எவ்வாறு பிரிக்க வேண்டும் ?. பயிற்சி - 7 1. கீழ் வருவனவற்றுள் புகுபதம் பகாப்பதம் எவை? பழம், மரங்கள், ஆடு, செய்தான் வீடு, சித்திரையான், மண், மலையன், அண்ணன், மூக்கன்.