பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மாணவர்

தமிழ் இலக்கண விளக்கம்

மாணவர்களே. நாம் ஒரு மொழியைத் தவறில்லாமல் பேச வேண்டுமானலும், எழுத வேண்டுமானாலும், அந்த மொழியினுடைய இலக்கணத்தை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் இப்போது கற்பது தமிழ்மொழி. ஆகையால், அந்த மொழியைத் திருத்தமாகப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் தமிழ் இலக்கணத்தைக் கற்போம். இலக்கணம் இன்பமான பாடம். இஃது ஒரு சிறிது கற்கின்ற வரையில் கடினமாகத் தோன்றும் சிறிது கவனம் செலுத்திப் படிக்க ஆரம்பித்ததும் நமக்கு இன்பத்தைத் தரும்.

நாம் பேசும்போதும், வாசிக்கும்போதும், எழுதும் போதும் பல சொற்களைப் பயன்படுத்துகிருேம். அச்சொற்கள் உண்டாவதற்குக் காரணமாக இருப்பவை எழுத்துக்கள். ஆதலின், முதலில் எழுத்துக்களை உணர்ந்து, பின்னே சொற்களையும், அதன் பின் சொற்களால் ஆன தொடர்களையும் கற்போம்.