பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 1. கீழ் வருவனவற்றுள் எவை வினையால் அணையும் பெயர்கள் ? கெடுவான் கேடு நினைப்பான். நன்கு படிப்பவன் தேர் வில் வெற்றி பெறுவான். நேற்று வந்தவனை இன்று கண்டேன். படிப்பவனை எவரும் விரும்புவர். வந்தவர் களுக்கு உபசாரம் செய்ய வேண்டும். ஒடிப்போனவ னுக்கு ஒன்பதாம் மடத்தில் குரு. 2. கோடிட்ட இடங்களில் தகுந்த வினையால் அணையும் பெயர்களை அமைக்க : காமுறுவர். --- இகழ்ச்சி அடையார். - புல்லும் ஆயுதம் --- சொல்லு. வாய்க்கு - உளருதே. -- திருந்தச் செய். அளவைப் பெயர் 10. அளவைக் குறிப்பது அளவைப் பெயர். அது ந - ன் கு வகைப்படும். அவை எண்ணல் அளவைப் பெயர், எடுத்தல் அளவைப் பெயர், முகத்தல் அளவைப் பெயர், நீட்டல் அளவைப் பெயர் என்பவை. 11. எண்ணல் அளவைப் பெயர்கள் என்பன எண்ணேக் குறித்து வருவனவாம். (உ-ம்) ஒன்று. இரண்டு, நூறு ஆயிரம். 12. எடுத்தல் அளவைப் பெயர்களாவன : கிறுக் கப்படும் அளவைக் குறித்து வருவனவாம். (உ-ம்) பலம், சேர், வீசை, மணங்கு.