பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கேள்விகள் 1. வினைச்சொல்லாவது யாது ? 2. செய்வினையாவது யாது ? 3. செயப்பாட்டு வினையானது யாது ? 4. செயப்பாட்டு வினையில் வினைச்சொல் எவ்வாறு வரும் ? 5. செய்வினை வாக்கியத்திற்கும் செயப்பாட்டு வினை வாக்கியத்திற்கும் உள்ள பேதம் என்ன ? பயிற்சி.15 1. நட, வா, மடி, விடு, கூ-இவ்வினைகள் செய்வினை,செயப் பாட்டு வினைகளாக வரும்படிஉதாரணம் எழுதுக: 2. கீழ்வரும் செய்வினை வாக்கியங்களைச் செயப்பாட்டு வினை வாக்கியங்களாக மாற்றுக :கந்தன் வண்டியை ஒட்டினன். குயவன் பானைகளைச் செய்கிறன். உபாத்தியாயர் நாளைக்குக் கணக்கைப் போதிப்பார். நண்டு சேற்றை வாரி அடிக்கிறது. 3. கீழ்வரும் செயப்பாட்டு வினை வாக்கியங்களைச் செய் வினை வாக்கியங்களாக மாற்றுக :கூடம் என்னல் மெழுகப்பட்டது. பேளு உன்னல் வாங் கப்பட்டது. பலகை குழந்தையால் உடைக்கப்பட்டது. வேலனல் வேலை செய்யப்பட்டது. நாடு அரசர்களால் காக்கப்படுகிறது. 4. கீழ்வருவனவற்றுள் செய்வினை, செயப்பாட்டு வினை களைக் குறிப்பிடுக;நடத்தப்பட்டது, நடந்தான், வருவான் தேய்க்கப் பட்டது, நடித்தான், ஒதப்பட்டது.