பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அந்த இளைஞனும் மாமனார் வீட்டில், மனைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்து வந்தான்.

பண்ணையார் காசிக்கு யாத்திரை சென்றார். ஒரு நாள், பாடகர் ஒருவர், தம் குழுவினருடன் பண்ணையார் வீட்டுக்கு வந்தார். “ஊர்தோறும், செல்வந்தர் வீடுகளில் பாடுவது வழக்கம்” என்றார்.

“பண்ணையார் யாத்திரை சென்றுள்ளார், எனக்கு இசையில் விருப்பம் இல்லை. நீங்கள் பண்ணையார் வந்த பிறகு வரலாம்” என்றார் மாப்பிள்ளை.

பாடகர் வருத்தத்தோடு, புறப்படத் தயாரானார். அப்போது குளித்து விட்டு வந்த பண்ணையார் மகள், “வந்தவர் யார் எதற்காக வந்தார்?" என்று கேட்டாள்.

"பாடகராம், பாடினால், சன்மானம் பெறலாம் என்று வந்தார், பண்ணையார் யாத்திரை போயிருக்கிறார். அவர் வந்த பிறகு வரலாம் என்று கூறி அனுப்பினேன்” என்றான் மாப்பிள்ளை.

“நம்பிக்கையோடு வந்தவரை வெறுமனே போகச் சொல்வது முறையல்ல, என்று கூறி, பாடகரை வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தும்படி ஏற்பாடு செய்தாள் பண்ணையார் மகள்.

“எனக்கு இசையே தெரியாது, நான் எப்படி சபையில் இருந்து ரசிப்பது?” என்றான் மாப்பிள்ளை.

“அதை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, அவன் குடுமியில் ஒரு நூலைக் கட்டி, அதை தன்கையில் பிடித்துக் கொண்டு, பின்வரிசையில் அவள் இருந்தாள்.

பாடகர் பாடத் தொடங்கினார். உள்ளூர் மக்கள் கூடி இருந்தனர்.

பாடகர் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார்.