பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கழுதையால் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் இனிய குரல் ஆசை மட்டும் அதை விட்டு அகலவில்லை.

சில நாட்களில் அந்த மடக் கழுதை செத்துப் போய்விட்டது அதைக் கண்ட கிளி ஏளனமாக கிரீச் கிரீச் என்று ஒலித்தது.

பிறரைப் பார்த்து பொறாமை கொள்ளக் கூடாது.


11
குடியானவனின் மனக்கோட்டை

குடியானவன் ஒருவன், வெள்ளரிக் காயைத் திருடுவதற்காக ஒரு தோட்டத்துக்குச் சென்றான். ஒரு மூட்டை வெள்ளரிக் காய்களைப் பறித்துக் கொண்டு போய் விற்றால் பணம் கிடைக்கும். கிடைத்த பணத்திற்கு கோழி வாங்குவேன். என்று அவன் கற்பனை செய்தான். மேலும், அவன் யோசனை செய்யலானான்; கோழி, முட்டைகள் இடும். அவைகளை அடை காக்கும். குஞ்சுகள் பொறிக்கும். கூட்டம் கூட்டமாக குஞ்சுகளை வளர்ப்பேன்.

பிறகு, அந்தக் குஞ்சுகளை விற்று ஒரு பன்றி வாங்குவேன். பன்றி குட்டிகள் போடும் அந்தக் குட்டிகளை விற்று குதிரை வாங்குவேன். குதிரையும் குட்டிகளை ஈனும் அவைகளை வளர்த்து விற்றால், ஏராளமாகப் பணம் கிடைக்கும்.

அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வீடும் அத்துடன் ஒரு தோட்டமும் வாங்குவேன்.

அந்தத் தோட்டத்தில் வெள்ளரிக் காய்களை பயிரிடுவேன். “வெள்ளரிக்காய்களை எவரும் திருடாதபடி காவலுக்கு ஏற்பாடு” செய்வேன்.