பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

அதற்காக வண்டிக்காரனை அழைத்து, இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டு வரும்படி சொன்னார்.

வண்டிக்காரன், சமையல்காரனிடம், “நீயும் வருகிறாயா?” என்று கேட்டான்.

“பண்ணையார் காலாராவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்தக் கிராமத்தை விட்டுப் புறப்படுவதை நினைத்தால், அவருடைய கடவுள் கிராமத்தில் வசிக்காமல், பட்டனத்தில் வசிப்பதாகத் தோன்றுகிறது. என்னுடைய கடவுள் இங்கேயே தான் வசிக்கிறார்” என்றான் சமையல்காரன்.

“ஆமாம், உண்மைதான்! கடவுள் இருப்பாரானால், எல்லா இடங்களிலும் தானே இருப்பார். கிராமத்தில் இருந்தாலும் காப்பாற்றத்தானே செய்வார். ஏழை பணக்காரன், கிராமம், பட்டணம் என்ற பாகுபாடு காட்டினால், அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?” என்றான் வண்டிக்காரன்.


19
தாத்தாவை திணறச் செய்தான்

பெரியவர் ஒருவர் தம் பேரனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார். அவனுக்கு வயது ஆறு!

“தாத்தா! என்னிடம் உங்களுக்குப் பிரியம் உண்டு அல்லவா?” என்று கேட்டான் பேரன்.

“ஆம், உன்னிடம் எனக்கு உள்ள பிரியத்துக்கு அளவே இல்லை” என்றார் தாத்தா.

“தாத்தா! அப்படியானால் கடவுளிடமும் பிரியம் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டான். சிறுவன்